ரோஹித் இல்லை, சுப்மன் கில்தான் கேப்டன்: கொந்தளித்த ரசிகர்களுக்கு காரணம் கூறிய தேர்வுக்குழு தலைவர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் காரணம் குறித்து அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.
கில், ரோஹித்
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுப்மன் கில் (Shubman Gill) அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில் சுப்மன் கில் ஏன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அகர்கர் விளக்கம்
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் (Ajit Agarkar) அணித்தலைவர் தேர்வு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாட ரோஹித், கோஹ்லி முனைப்பு காட்டவில்லை.
மூன்று வடிவத்திற்கும் வெவ்வேறு அணித்தலைவர்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம்.இப்போதே கில்லை அணித்தலைவராக நியமித்தால்தான் 2027 உலகக்கிண்ணத்திற்கு தயாராக முடியும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் மிரட்டிய ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அணி விபரம் (ஒருநாள் தொடர்): சுப்மன் கில், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல், கேஎல் ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
அணி விபரம் (டி20): சூர்ய குமார் யாதவ் (அணித்தலைவர்), அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே, அக்ஷர் பட்டேல், ஜித்தேஷ் ஷர்மா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |