750 விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் சாதனை: ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா வெற்றி
அடிலெய்டில் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதுடன், ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
750 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்
அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினார்.

அத்துடன் இந்த தொடரில் மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 424 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 247 விக்கெட்டுகளையும், டி20களில் 79 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் ஷேன் வார்ன் 999 விக்கெட்டும், கிளென் மெக்ராத் 948 விக்கெட்டுகளும் வீழ்த்தி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |