தமிழ்நாட்டில் 20 செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்., கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை (Tamil Nadu AI Labs) உருவாக்க கூகுள் (Google) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 17 நாள் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த முக்கியமான புதிய முயற்சியை, தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜா உற்சாகமாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், "இதனை நான் 'Chenn.ai' என அழைக்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் இளைஞர்களுக்கு ஏ.ஐ. (AI) துறையில் திறன்களை வழங்குவதே எங்கள் இலக்கு," என அவர் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளில், தமிழ்நாடு அரசு பல முக்கிய துறைகளில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தங்கள் ரூ.900 கோடி முதலீடுகளை கொண்டு வருவதோடு, மாநிலத்தில் 4,000 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
An awe-inspiring visit to the offices of Apple, Google and Microsoft. Discussed various opportunities and exciting partnerships. Determined to strengthen these partnerships and make Tamil Nadu one of the foremost growth engines of Asia!@TRBRajaa @Guidance_TN @TNIndMin… pic.twitter.com/mQJzKwm0J2
— M.K.Stalin (@mkstalin) August 31, 2024
முக்கிய முதலீடுகள்:
- Nokia: சிருசேரியில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (R&D centre) அமைக்க.
- PayPal: சென்னை நகரில் ஏ.ஐ., மெஷின் லர்னிங் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு தனது மேம்பாட்டு மையத்தை விரிவாக்கம் செய்ய.
- Microchip and Yield Engineering Systems: கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் புதிய போக்குகளை (semiconductor innovation) மேம்படுத்த ஒத்துழைப்பு.
- Applied Materials: சென்னையில் மேம்பட்ட ஏ.ஐ. தொழில்நுட்ப மையத்தை அமைக்க.
- Infinx: மதுரையில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க.
இந்த முதலீடுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |