கிராமமே திரண்டு அடித்துக் கொல்லப்பட்ட நபர்: வெளிவரும் பகீர் பின்னணி
ஹோண்டுராஸ் நாட்டில் 600 பேர் சேர்ந்த கும்பல் இத்தாலியர் ஒருவரை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஐவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இத்தாலியரான 65 வயது Giorgio Scanu என்பவரே கும்பலால் கற்கள் மற்றும் தடியால் அடித்து கொல்லப்பட்டவர்.
இத்தாலியரின் குடியிருப்புக்கு சென்று அந்த கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக புதன்கிழமை தமது தோட்டத்தில் அரிய வகை பூக்களை சேதப்படுத்தியதாக கூறி ஆதரவற்ற 78 வயது நபரை இந்த இத்தாலியர் கொடூரமாக தாக்கி அவரது சாவுக்கு காரணமாகியுள்ளார்.
இந்த விவகாரம் உள்ளூர் மக்களால் காவல்துறையிடம் புகாராக அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே 600கும் மேற்பட்ட கிராம மக்கள் கற்கள், தடி மற்றும் கத்தியுடன் சென்று, இத்தாலியரை தாக்கியுள்ளனர்.
மட்டுமின்றி அவரது வாகனம் உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். தற்போது இந்த வழக்கில் 19 முதல் 55 வயதுக்கு உட்பட்ட ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இத்தாலியரான Giorgio Scanu கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். பொறியாளரான இவர் ஹோண்டுராஸில் பணியாற்றி வந்ததுடன், உள்ளூர் பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பில் மேலும் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.