மொபைல் போன் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த காயம்: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!
மத்திய பிரதேசத்தில் மொபைல் போன் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த மொபைல் போன்
நவீன உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், அவற்றில் உள்ள லித்தியம் அயன் பற்றரிகள் சில நேரங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள சரங்பூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணர்த்துகிறது.
அதாவது 19 வயது இளைஞர் அரவிந்த், மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
என்ன நடந்தது?
பாதிக்கப்பட்ட அரவிந்த் என்பவர், சந்தைக்குச் சென்று விட்டு நைன்வாடா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுங்கச்சாவடி அருகே எதிர்பாராத விதமாக அவரது மொபைல் போன் திடீரென வெடித்துள்ளது.
இந்த வெடிப்பின் தாக்கத்தால், அவர் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயமும், தலையில் தீவிர காயமும் ஏற்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு, அரவிந்த் சரங்பூர் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது காயங்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அவர் ஷாஜாபூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |