அசூர வேகத்தில் தாக்கும் மோச்சா புயல்! தமிழகத்தை நெருங்கும் ஆபத்து
வங்க கடலில் உருவாகியுள்ள மோச்சோ புயல், அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த பகுதிகளை பாதிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியிருக்கும் புயல்
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் திகதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
@mint
மோச்சா என அழைக்கப்படும் இப்புயல் வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Yesterday’s cyclonic circulation over southeast BoB lay over southeast BoB & adjn South Andaman Sea at 0830 IST of 7th May. LPA is likely to form over the same region on 8th May. To intensify into a depression over SE BoB around 9th May. To intensify into a cyclonic storm pic.twitter.com/ewICcr7kpC
— India Meteorological Department (@Indiametdept) May 7, 2023
இந்த மோச்சோ புயல் மத்திய வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் மேற்கண்ட அனைத்து விஷயங்களும், புயல் உருவாவது உறுதியாகிவிட்டது. மேலும் இப்புயல் தமிழகத்தை பெரிதாக பாதிக்காது என்றாலும் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேர கனமழை பொழியுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் மழை
தற்போதுள்ள தாழ்வான காற்றழுத்தம் உண்டாகியிருக்கும் நிலையில், இதன் பயணத்தை கணிக்க முடியாது என்றாலும் ஒடிசாவில் பெரும்பாலும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Heavy to very heavy rainfall and Squally winds over Andaman & Nicobar Islands during 08th to 12th May pic.twitter.com/Adnqc8nU1w
— India Meteorological Department (@Indiametdept) May 7, 2023
ஒடிசா அல்லது ஆந்திர பிரதேசம் இடையே எங்காவது ஓரிடத்தில் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வடக்கு ஆந்திர பகுதி அதிகமாக இதனால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
@gettyimages
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் பனி மொழி பொழிந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு அறிக்கையில் கடலோர பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவித்துள்ளனர்.