கீழே விழ போன மு.க.ஸ்டாலினை தாங்கி பிடித்த பிரதமர் மோடி.., அரங்கிற்குள் நுழைந்த போது பரபரப்பு
தமிழக முதலமைச்சர் கால் இடறி தடுமாறி விழுந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரை தாங்கி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி
சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்காக மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரை தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்த மோடியை சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தமிழக முதலமைச்சர் வரவேற்றார்.
இதில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஆளுநர் ரவி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைரலாகும் வீடியோ
தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் வரவேற்ற பின்னர் இருவரும் அரங்கிற்குள் நுழைந்தனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென கால் இடறி லேசாக நிலை தடுமாறினார்.
தமிழகம் சறுக்கிய போதெல்லாம் அதை தாங்கிப் பிடித்தவர் நமது பாரத பிரதமர் மோடி. #TNwithModi pic.twitter.com/zCzGzYRrFc
— Krishna Kumar Murugan (@ikkmurugan) January 19, 2024
அதே நேரத்தில் பிரதமர் மோடி அவரை தாங்கி பிடித்துக் கொண்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, தமிழகம் சறுக்கிய போதெல்லாம் அதை தாங்கிப் பிடித்தவர் பிரதமர் மோடி என்று கூறி பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |