புதிய ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு! பதவி பிரமாணம் எப்போது?
குடியரசு தலைவரை சந்தித்து நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் .
ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி
இந்தியாவில் 18 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதையடுத்து இன்று டெல்லியில் நடைபெற்ற NDA கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு, நரேந்திர மோடி மற்றும் முக்கிய கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்து 3வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
Every moment of my life is dedicated to upholding the noble values enshrined in the Constitution of India, given to us by Dr. Babasaheb Ambedkar. It is only due to the Constitution that a person like me, born into poverty and in a backward family, is able to serve the nation. Our… pic.twitter.com/kw7z7OC6i5
— Narendra Modi (@narendramodi) June 7, 2024
இந்த சந்திப்பின் போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் நரேந்திர மோடி குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்தார்.
ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு
இந்த சந்திப்பை தொடர்ந்து நரேந்திர மோடியை 3வது முறையாக ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மோடி மற்றும் அவரது புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜூன் 9ம் திகதியான ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Leader of the National Democratic Alliance Shri @narendramodi met Hon’ble President Smt. Droupadi Murmu at Rashtrapati Bhavan and staked claim to form the NDA Government at the Centre. pic.twitter.com/bERXEp0MSY
— BJP (@BJP4India) June 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |