பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்தியா வருகை: அயோத்தி ராமர் கோவில் மாதிரியை பரிசளித்த மோடி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு அயோத்தி ராமர் கோவில் மாதிரியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
மக்ரோன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்
இந்தியாவின் இன்று 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது, ஒவ்வொரு ஆண்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அயோத்தி ராமர் கோவில் மாதிரியை பரிசளித்த மோடி
நேற்று ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மஹால் ஆகியவற்றை சுற்றி பார்த்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சாலை பேரணியிலும் கலந்து கொண்டார்.
#WATCH | French President Emmanuel Macron arrives at Amber Fort in Rajasthan's Jaipur, meets school students gathered there to welcome him
— ANI (@ANI) January 25, 2024
EAM Dr S Jaishankar and Rajasthan Deputy CM Diya Kumari are also present pic.twitter.com/L7RASMCFmA
மேலும் பிரதமர் மோடியுடன் ஜெய்ப்பூர் சாலையில் உள்ள கடையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் டீ குடித்தார்.
அத்துடன் தொடர்ந்து கடைகளை பார்வையிட்ட இம்மானுவேல் மக்ரோனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோவில் மாதிரியை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.
#WATCH | Rajasthan: Prime Minister Narendra Modi gifts a replica of Ram Mandir to French President Emmanuel Macron, in Jaipur. pic.twitter.com/l9K91lOOt8
— ANI (@ANI) January 25, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |