உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்த மோடி: ஜெலென்ஸ்கி கடும் விமர்சனம்
இந்தியாவின்பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய விஜயம் என்பது உக்ரைனுடனான சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் என அந்த நாட்டின் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெருத்த ஏமாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் இருக்கும் போதே உக்ரைனில் சிறார் மருத்துவமனை மீது ரஷ்யா கொடூரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உலகின் மிக மோசமான குற்றவாளியை உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் ஒருவர் கட்டிப்பிடிப்பது என்பது பெருத்த ஏமாற்றமாகவும் அமைதி முயற்சிகளுக்கு கிடைத்துள்ள பேரடியாகவும் பார்ப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
திங்களன்று ரஷ்யா நடத்திய கொடூரமான தாக்குதலில் 3 சிறார்கள் உட்பட 37 பேர்கள் ஒரே மருத்துவமனையில் கொல்லப்பட்டனர். குறித்த ஏவுகணைத் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.
மோடியின் முதல் ரஷ்ய பயணம்
உலக நாடுகள் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றே கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு நரேந்திர மோடியின் முதல் ரஷ்ய பயணம் இதுவென கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |