தென் ஆப்பிரிக்காவில் இந்திய பிரதமர் மோடி!
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது, நேற்று தொடங்கியுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார்.
2019ம் ஆண்டுக்குபின்னர் இந்த வருடமே மாநாடு நேரில் நடைபெறுகிறது, இந்த அமைப்பில் சேர்வதற்காக 20 நாடுகள் விண்ணப்பித்துள்ள நிலையில், அந்நாடுகளை இணைப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
இதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, வாட்டர்க்லூப் விமானப் படை தளத்தில் தென் ஆப்பிரிக்காவின் துணை ஜனாதிபதி பால் மஷாடைல் நேரில் சென்று வரவேற்றார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் உலக தலைவர்களுடன் நிறைய சந்திப்புகள், ஆலோசனைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |