உக்ரைன் விஷயத்தில் இந்தியாவில் இதனை செய்ய முடியும்: பிரான்ஸ் ஜனாதிபதி கோரிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவால் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி கருத்து
ஏர் இந்தியாவிற்கான 250 விமானங்கள் மற்றும் ஏர்பஸ் வழங்குதல் ஒப்பந்தத்தை அறிவிக்கும் தலைவர்களின் மெய்நிகர் சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேசினார்.
அதில் உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போன்ற மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவால் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என தெரிவித்தார்.
Reuters
அத்துடன் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை போன்ற கடினமான சூழலில், இந்தியாவின் ஜி 20 பிரசிடென்சியின் வெற்றிகாக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா கருத்து
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் இந்த கருத்துக்கு முன்னதாக, சமீபத்தில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய பிரதமர் மோடியால் சமாதானப்படுத்த முடியும்.
உக்ரைன் மீதான விரோத போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா மேற்கொள்ள விரும்பும் அனைத்து முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும் என தெரிவித்து இருந்தார்.
PTI
மேலும் அவர் மேற்கொள்ள விரும்பும் எந்த முயற்சியையும் நான் பேச அனுமதிப்போம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.