45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
போலந்து செல்லும் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக போலந்து செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து இரண்டு நாள் பயணமாக போலந்து புறப்பட்டார்.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதற்கு பின் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
போலந்து நாட்டின் பயணத்தை முடித்துவிட்டு உக்ரைனுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. அவர் போலந்தில் இருந்து சுமார் 10 மணி நேரம் ரயில் பயணம் செய்து உக்ரைன் செல்கிறார்.
அங்கு அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசுகிறார். பின்னர், வார்சாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார்.
போலந்து மற்றும் இந்தியாவின் தூதரக உறவு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில் அவர் புவிசார் அரசியல் பிரச்சனைகள், வர்த்தகம் ஆகிய விடயங்களை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |