தேர்தல் முடிவுக்கு முன்பு.., கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானம் செய்கிறார் மோடி!
மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்.
மோடி தியானம்
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4 -ம் திகதி அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், வரும் 30 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகிறார்.
அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
அதன்பின்னர், படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். அவர், அன்று மாலை முதல் ஜூன் 1-ம் திகதி வரை விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1 -ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு நடந்த 2019 மக்களவை தேர்தலின் போதும் பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |