4 முறை ட்ரம்பின் அழைப்பை நிராகரித்த மோடி - ஜேர்மன் நாளிதழ் அறிக்கை
கடந்த சில வாரங்களில் 4 முறை ட்ரம்பின் அழைப்பை மோடி நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியின் Frankfurter Allgemeine Zeitung (FAZ) என்ற நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபது டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சில வாரங்களில் 4 முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மோடி அந்த அழைப்புகளை ஏற்க மறுத்துள்ளார். இது மோடியின் கோபத்தையும், எச்சரிக்கையையும் பிரதிபலிப்பதாக ஜேர்மன் நாளிதழ் கூறுகிறது.
அமெரிக்கா இந்தியா மீதி 50 சதவீதம் வரி வித்திக்கப்பட்டதற்கு இடையில் இந்த அழைப்புகள் வந்துள்ளன.
இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப், ஜூலை 31-அன்று இந்தியாவும் ரஷ்யாவும் விரைவில் தங்கள் பொருளாதாரத்தை மரண நிலையில் சந்திக்கும் என விமர்சித்திருந்தார்.
இதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் ஆகஸ்ட் 10-ஆம் திகதி, இந்தியா உலகின் மூன்றாவது பெரும் பொருளாதாரமாக மாறிவருகிறது என தெரிவித்தார்.
சிக்கலான நிலையில் இந்தியா-அமெரிக்கா உறவுகள்
ட்ரம்ப் பாகிஸ்தானுடன் எண்ணெய் ஒப்பந்தம் செய்வதாகவும், பாகிஸ்தான் இராணுவ தலைவரை அமெரிக்காவில் வரவேற்றத்தையும் இந்தியா எதிர்வினையாக எடுத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில், மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்தித்து மிகுந்த மரியாதை பெற்றதாக கூறியுள்ளார். இதனை, இந்தியா சீனாவுடன் நெருக்கமாக செயல்பட முயல்கிறது என சிலர் கருதுகின்றனர்.
இந்தியா-அமெரிக்கா உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில், இந்தியா தனது நிலையை மாற்றி உலகளாவிய தாக்கத்தை நோக்கி நகர்கிறது என FAZ தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Modi Trump phone call refusal, India US trade dispute 2025, FAZ report Modi Trump, Modi ignores Trump calls, Indo-US relations 2025, Trump India tariffs, Modi Trump diplomatic standoff, Modi China SCO summit, India Russia oil deal