தீபாவளிக்கு selfie எடுத்து எனது App இல் பதிவேற்றுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
தீபாவளியன்று உள்ளூர் பொருட்களை வாங்கி புகைப்படம் எடுத்து தனது செயலியில் பதிவிடுமாறும் இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோள்
வருகின்ற 12 ஆம் திகதி உலகளவில் தீபாவளிக் கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த பிரதமர் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அதாவது சுற்றுலா தலத்துக்கோ, ஆன்மிக தலத்துக்கோ எங்கு சென்றாலும் உள்ளூர் பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Let's come together to support local businesses...
— NarendraModi App (@NamoApp) November 8, 2023
Buy local products, click selfies with your purchases & upload them to start and share a thread with friends & family!
Join the #VocalForLocal movement & spread the festive cheer – all with the NaMo App: https://t.co/P14GWvH8LR pic.twitter.com/sOfU9o8WVg
அந்த பொருட்களுடன் அல்லது அதை உற்பத்தி செய்தவர்களிடம் இருந்து புகைப்படம் எடுத்து 'நமோ' செயலியில் பதிவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் உள்ளூர் திறமைசாலிகளுக்கு ஆதரவு அளிக்கலாம், இந்தியர்களின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தலாம் மற்றும் நமது பாரம்பரியம் செழிப்படையவும் டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |