குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன! உக்ரைன் குறித்து பிரதமர் மோடி வேதனை
உக்ரைனில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அரசு முறைப் பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) போலந்தைத் தொடர்ந்து உக்ரைனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்தித்த மோடி, போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார்.
மேலும், இரு தலைவர்களும் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வலிமையைக் காண நான் பிரார்த்திக்கிறேன்
இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பதிவில், "கீவில் உள்ள தியாகி கண்காட்சியில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினேன். மோதல்களால் சிறு குழந்தைகள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இதயம் செல்கிறது. மேலும் அவர்களின் துயரத்தைத் தாங்கும் வலிமையைக் காண நான் பிரார்த்திக்கிறேன். உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது.
இந்தியா - உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த மாபெரும் தேசத்திற்கு வந்தேன். நான் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினேன்.
அமைதி எப்போது நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
President @ZelenskyyUa and I paid homage at the Martyrologist Exposition in Kyiv.
— Narendra Modi (@narendramodi) August 23, 2024
Conflict is particularly devastating for young children. My heart goes out to the families of children who lost their lives, and I pray that they find the strength to endure their grief. pic.twitter.com/VQH1tun5ok
My visit to Ukraine was historic. I came to this great nation with the aim of deepening India-Ukraine friendship. I had productive talks with President @ZelenskyyUa. India firmly believes that peace must always prevail. I thank the Government and people of Ukraine for their…
— Narendra Modi (@narendramodi) August 23, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |