அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்- கூட்டத்தில் மோடியின் பேச்சு
NDA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடமான சாமிதான் சதனில் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் நரேந்திர மோடி நாடாளுமன்ற குழுத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து எம்பி-க்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது..,
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்த எம்.பி.க்களுக்கு நன்றி.
பாராளுமன்ற NDA குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாரதிய ஜனதா தொண்டர்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.
புதிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவில் 22 மாநிலங்களில் NDA கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
NDA ஆதரவு மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் NDA போல் வேறு எந்த கூட்டணியும் வென்றதில்லை.
ஆட்சி அமைக்க உரிமைகோரும் அளவிற்கு NDA கூட்டணியில் எம்பிக்கள் உள்ளனர்.
#WATCH | At the NDA Parliamentary Party meeting, Prime Minister Narendra Modi says "NDA is a group committed to the nation first. It must have been assembled in the beginning after a long period of 30 years. But today I can say that NDA is an organic alliance in the political… pic.twitter.com/RLjqmdybzB
— ANI (@ANI) June 7, 2024
நாட்டை வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது.
NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் இயற்கையாக ஒன்றிணைந்து செயல்படக்கூடியவை.
NDA கூட்டணி கட்சிகளுக்கு தேச நலன் தான் பிரதானமானது.
தேச நலனில் NDA கூட்டணி கட்சிகள் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது.
அதிகார ஆசையில் உள்ள ஒரு சிறு குழு தான் இந்தியா கூட்டணி.
ஆட்சி அதிகாரத்திற்காக ஒன்று சேர்ந்த இந்தியா கூட்டணி தற்போது உடையத் தொடங்கி உள்ளது.
கடந்த காலங்களில் நல்லாட்சி கொடுத்து புகழ்பெற்றது NDA கூட்டணி.
கடந்த 10 வருடங்களில் NDA நல்லாட்சி தந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம் என நரேந்திர மோடி பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |