பதவியேற்பு விழா: இந்தியா வந்தடைந்த வங்கதேச பிரதமர்
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கப்போகும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டெல்லிக்கு வருகை புரிந்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது.
உள்ளூர்நேரப்படி நாளை இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது, இதில் பங்கேற்க உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா இன்று டெல்லி வந்தடைந்தார்.
VIDEO | #Bangladesh PM Sheikh Hasina arrives at Delhi airport. She will be attending the swearing-in ceremony of Prime Minister Narendra Modi and Council of Ministers, scheduled to be held tomorrow.
— Press Trust of India (@PTI_News) June 8, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/8iBBRMvpiA
இவரை தவிர இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸீ, செஷெல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அபிஃப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜீக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் விழாவில் பங்கேற்க வரவிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.