1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.
மோடி வெற்றி
இன்று காலை 8 மணி முதல் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 -க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பாஜக கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் 1,52,513 ஆகும்.
கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 5,81,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர், 3 -வது முறையாக வாரணாசி தொகுதியில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |