மீண்டு வர சில காலம் ஆகும்.., அறுவை சிகிச்சை முடிந்ததும் முகமது ஷமி பதிவு
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை.
முகமது ஷமிக்கு சிகிச்சை
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முகமது ஷமி தான். மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைய உறுதுணையாக இருந்தார்.
கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷமி விளையாடினர். அதன்பின், கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
மீண்டு வர சில காலம்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, ஜனவரி கடைசி வாரத்தில் சிகிச்சை எடுத்த போது ஊசி ஒன்று செலுத்தப்பட்டதால் அவரால் ஓட முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது காயத்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. இந்நிலையில், முகமது ஷமி தனது ட்விட்டர் பதிவில், "வெற்றிகரமாக எனக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைவதற்கு சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இந்த காயத்தை நீங்கள் தைரியமாக சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |