அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட அலி கமேனியின் இரத்தத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று ஈரானிய மக்கள் கோருவதாக தற்போதைய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
பழிவாங்குவது உறுதி
தனது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வமான செய்தி ஒன்றில், கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்ட தியாகிகள் ஆகியோரின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரமரணம் அடைந்த தலைவரின் இரத்தத்திற்கும், இந்த இரண்டு போர்களில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் இரத்தத்திற்கும், குற்றவாளிகளும் இழிவானவர்களுமான கொலையாளிகளிடமிருந்து பழிவாங்குவோம் என நாங்கள் சபதம் செய்கிறோம் என மொஜ்தபா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கை தவிர்க்க முடியாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரம் தனது தனிப்பட்ட இருப்பு அல்லது பிற அதிகாரிகளின் இருப்பைச் சார்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர், தமது தந்தையின் இறுதிச்சடங்குகளில் ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வகையில் மக்கள் திரண்டு வந்தமைக்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் உள்ள அலி கமேனியின் அலுவலகத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இறுதிச் சடங்குகளின்போது மொஜ்தபாவின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசாவின் புனிதத் தலத்தில் அயதுல்லா அலி கமேனி நல்லடக்கம் செய்யப்பட்டார்; அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அந்தத் தலைவருக்குத் தங்கள் இறுதி விடைபெறும் அஞ்சலியைச் செலுத்த அங்கு கூடியிருந்தனர்.
ஈரானின் திட்டம்
இதற்கிடையில், தன்னை படுகொலை செய்வதற்காக ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீப நாட்களாக தீவிரமாகப் பேசி வருகிறார். கமேனியின் அறிக்கை வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, நீண்ட காலமாகவே தான் ஈரானின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ட்ரம்பிற்கு எதிரான ஈரானின் திட்டம் தொடர்பில் இஸ்ரேல் உளவு அமைப்புகள் திரட்டியுள்ள தரவுகளை அமெரிக்க உளவு அமைப்புகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தவோ உறுதி செய்யவோ இல்லை என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால், இஸ்ரேல் தெரிவித்துள்ள கொலை மிரட்டலை ட்ரம்ப் மட்டும் இதுவரை பல சந்தர்ப்பங்களில் கூறி வருகிறார். ஈரானிடம் இருந்து ட்ரம்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் எதுவும் இதுவரை உறுதி செய்யவில்லை.
மேலும், தாம் சொல்வது உண்மை என்பதை உறுதி செய்யும் வகையில், அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் திரும்பும் வழியில் ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டார்.
இதனையடுத்து, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான ஒரு பாதுகாப்பு உத்தி இது என்று வெள்ளை மாளிகை பின்னர் விளக்கமளித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |