எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டு: பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய அதிபர்
Mongolian President Khurelsukh Ukhnaa Announces Resignation: ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மங்கோலிய ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய அதிபர்
மங்கோலியாவின் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி, அரசு ஆதரவு பெற்ற ரயில்வே திட்டத்தின் மூலம் நாட்டின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா நிதி ஆதாயம் அடைந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மங்கோலிய ஜனாதிபதி குரேல்சுக் உக்னா (Khurelsukh Ukhnaa) தன்னுடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜனாதிபதி குரேல்சுக் உக்னா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அத்துடன் தன் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பொய்யான புகார்கள் சுமத்தப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தன்னுடைய நற்பெயரை காத்துக் கொள்ளும் விதமாக பதவியில் இருந்து விலகுவதாக குரேல்சுக் உக்னா அறிவித்துள்ளார்.
குரேல்சுக் உக்னா அளித்துள்ள இந்த ராஜினாமாவுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றமான ஸ்டேட் கிரேட் குரால் ஒப்புதல் அளித்த பிறகே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.