உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலத்தில் குரங்குகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு தொல்லை
Monkeys take over Taj Mahal's grounds, sparking warning for tourists: தாஜ்மஹாலுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள், குரங்குகளால் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் அருகே நூற்றுக்கணக்கான குரங்குகள் படையெடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.

குரங்குகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு தொல்லை
ஒரு பக்கம் மக்கள் தாஜ்மஹாலை பார்வையிட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம், நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக செல்வதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
விடயம் என்னவென்றால், இந்தக் குரங்குகளால் சுற்றுலாப்பயணிகள் தாக்கப்படுவது குறித்தும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
தாக்கப்பட்டவர்களில் பிரித்தானியரான Suzanne Ann Barrett என்பவரும் ஒருவர். அதேபோல, பிரேசில் நாட்டவரான Anthony Penn (83), டெல்லியைச் சேர்ந்த தீபிகா கோயல், ஹரியானாவைச் சேர்ந்த அயன்ஷ் (6), கர்நாடகாவைச் சேர்ந்த முகம்மது அலி, தென் கொரியாவைச் சேர்ந்த Kim Mihe ஆகியோரும் குரங்குகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரே நேரத்தில் தாக்கப்படவில்லை, இது ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தாக்கப்பட்டவர்கள் பட்டியல்.
உள்ளூர் அதிகாரிகள் குரங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் பலனளித்ததுபோல் தெரியவில்லை.

இதற்கிடையில், இப்படி லட்சக்கணக்கான மக்கள் வருகை புரியும் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலத்தில் குரங்குகள் தொல்லை கொடுத்துவரும் விடயம், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.