மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வாங்கும் தொழிலாளிக்கு ரூ.2 கோடி வருமான வரி கேட்டு நோட்டீஸ்
மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வாங்கும் தொழிலாளிக்கு ரூ.2 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.2 கோடி கேட்டு நோட்டீஸ்
இந்திய மாநிலமான பீகார், கயாவின் கோட்வாலி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நய் குடோன் மொஹல்லாவில் வசிப்பவர் ராஜீவ் குமார் வர்மா. எண்ணெய் குடோனில் வேலை செய்து வரும் இவர் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.
இவருக்கு, ரூ.2 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நோட்டீஸைப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் ரூ. 67 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளி பயத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். பின்னர், அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தியவுடன் வருமானத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரை மேல்முறையீடு செய்யுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வருமானவரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில், "கடந்த 2015-16 -ம் நிதியாண்டில் ரூ. 2 கோடி நிரந்தர வைப்புத்தொகை கணக்கை (எஃப்டி) ராஜீவ் குமார் தொடங்கியுள்ளார். ஆனால், அவர் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜீவ் குமார், "தான் 2015 -ம் ஆண்டில் எஃடி கணக்கை தொடங்கியதாகவும், முன்கூட்டியே பணம் தேவைப்பட்டதால் எடுத்துவிட்டதாகவும்" கூறினார்.
அந்த நேரத்தில் தான் எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு மொத்த வியாபாரியிடம் பணிபுரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |