காபூலில் இருந்து கிளம்பிய விமான டயரில் சிக்கியிருந்த மனித உடல் பாகங்கள்: அதிர்ச்சியில் உலகம்
காபூல் நகரில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ சரக்கு விமானத்தில் இருந்து விழுந்து பலபேர் இறந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க ராணுவ சரக்கு விமானமானது, காபூல் நகரில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் நோக்கில் அத்தியாவசிய பொருட்களுடன் சென்றதாகவும்,
ஆனால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக விமானத்திற்குள் புகுந்து கொண்டதால், கொண்டு சென்ற சரக்குகளை இறக்க முடியாமல், மீண்டும் புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கட்டார் நாட்டின் அல் உதீத் விமான தளத்தில் தரையிறங்கிய அந்த விமானத்தின் டயரில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. மட்டுமின்றி, பறக்கும் விமானத்தில் இருந்து மனிதர்கள் தவறிவிழும் பதறவைக்கும் காட்சிகளும் முன்னர் சமூக ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
குறைந்தது 7 பேர்கள் வரையில் விமானத்தில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் குறித்த தகவலை இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.