ஈஸ்டரை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட உக்ரேனிய சிறைக் கைதிகளை விடுவித்த ரஷ்யா
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான ஈஸ்டர் திருநாளில், அமைதியை முன்னிறுத்தும் ரஷ்யாவின் பிடியிலிருந்த 100க்கும் மேற்பட்ட உக்ரேனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் திருநாள்
இயேசு உயிர்தெழுந்த நாளாக கொண்டாடப்படும் ஈஸ்டர் திருநாளில், இரு நாடுகளிடையே அமைதியை முன்னிறுத்தும் வரையிலும், போரின் நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டும் உக்ரைன் கைதிகளை ரஷ்யா விடுவித்துள்ளது.
@reuters
பாதுகாப்பு காரணங்களால் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஈஸ்டரை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் வழக்கமாக போரில் சண்டையிடும் ரஷ்ய வீரர்கள், உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஓய்வில் இருந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யாவால் துவங்கப்பட்ட இப்போரில் ரஷ்யா மிருகத்தனமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. மனிதர்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பாரிய ராணுவ தாக்குதலையும் உக்ரைன் மீது நடத்தினர்.
@reuters
மேலும் போரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்ய சிறையில் அடைத்து வைத்திருந்தனர். நூற்றுக்கணக்கான உக்ரைன் கைதிகள் ரஷ்யாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கைதிகளை விடுவித்த ரஷ்யா
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட 130 வீரர்கள், மாலுமிகள், எல்லைக் காவலர்கள் மற்றும் பலர் "ஈஸ்டர் கைதிகள் பரிமாற்றத்தை" தொடர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக ஜனாதிபதியின் ஆலோசகர் ஆண்ட்ரி யெர்மக்(Andriy Yermak) அறிவித்ததால், நூற்றுக்கணக்கான உக்ரேனிய குடும்பங்கள் மகிழ்ச்சியடைய காரணமாக அமைந்துள்ளது.
@reuters
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவால் வெளியிடப்பட்ட டெலிகிராம் வீடியோவில், விடுவிக்கப்பட்டவர்களில் கிழக்கு சுரங்க நகரமான பாக்முட் அருகே போரிட்ட ராணுவ வீரர்களும் அடங்குவர். பாக்முட் பல மாதங்களாக ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.
"எங்கள் மக்களின் உயிர்கள் எங்களுக்கு மிக உயர்ந்த மதிப்பு" என்று உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் எர்மக் கூறியுள்ளார். மீதமுள்ள அனைத்து போர்க் கைதிகளை மீண்டும் கொண்டு வருவதே உக்ரைனின் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
@reuters
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்ட ஈஸ்டர் உரையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த விடுமுறையை "நன்மையின் வெற்றி, சத்தியத்தின் வெற்றி, வாழ்க்கையின் வெற்றி" என்று விவரித்தார்.
மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் உக்ரேனியர்களின் ஒற்றுமை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.