உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இவ்வளவா! அமெரிக்கா வெளியிட்ட தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில், கடந்த டிசம்பரிலிருந்து 1 லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் இரு நாட்டினருக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
@reuters
இந்நிலையில் கடந்த சில மாதமாக உக்ரைன் போரில் ரஷ்யாவின் ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி செய்வதன் மூலம், உக்ரைனால் தொடர்ந்து எதிர்ப்பு போரிட சாத்தியமாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவிற்கு இழப்பு
உக்ரைன் போரில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 20000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த டிசம்பரிலிருந்து ரஷ்யா 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளது.
@afp
இதில் 80000 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் வாக்னர் போன்ற தனியார் ராணுவப்படையை சேர்ந்தவர்களாவர்.
@ap
இந்த பெரும் இழப்புக்கு முக்கிய காரணமாக, பாக்முட்டை கைப்பற்ற ரஷ்யா போரிடும் போது நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. பாக்முட்டின் பெரும்பாலான பகுதியை ரஷ்யா கைப்பற்றியிருந்தாலும் இன்னும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படவில்லை.
கடந்த மே 1ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவலுக்கு ரஷ்யா தரப்பில் எந்தவித எதிர் கருத்துக்களும் இதுவரை வரவில்லை.