தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 40 ஆயிரத்திற்கும் மேலான பட்டதாரிகள்
தூய்மை பணியாளர் வேலைக்கு ஆயிரக்கனக்கான பட்டதாரிகள் விண்ணப்பம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதை காலத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல் கிடைக்கின்ற வேலைகளை பார்த்து வருகின்றனர்.
குறைவான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து குடும்ப சூழ்நிலைக்காக கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில், தூய்மை பணியாளர் வேலைக்கு ஆயிரக்கனக்கான பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தூய்மை பணியாளர் வேலை
இந்திய மாநிலமான அரியானாவில் மாநில அரசு அலவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் உள்பட சுமார் 1.2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதாவது, இந்த வேலைக்காக 6,000 -க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள், 40,000 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12 -ம் வகுப்பு வரை படித்தவர்கள் என பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த வேலைக்கான சம்பளம் ரூ.15000 என்ற நிலையில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையால் அங்குள்ள காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |