ரஷ்ய வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பெலாரஸ் பிணவறைகள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை
ரஷ்ய வீரர்களின் சடலங்களால் பெலாரஸ் பிணவறைகள் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, கடும் இழப்பை சந்தித்துள்ளது.
மார்ச் 12ம் திகதி நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் 12,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், புடினின் நட்பு நாடான பெலராஸில் உள்ள பிணவறைகள், ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.
உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலராஸில் உள்ள பிணவறைகளுக்கு கொண்ட செல்லப்படுவதாகவும், பின் அங்கிருந்து விமானம் அல்லது ரயில் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
பெலாரஸ் நகரங்களான Mozyr, Homel மற்றும் Narouila-வில் உள்ள பிணவறைகள் நிரம்புள்ளதாக உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.