பூகம்பத்தால் நாசமடைந்த மொராக்கோ; 1000த்தை தாண்டியது பலி எண்ணிக்கை
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில், மவுராஷ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1037 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டது.
Getty Images
மொராக்கோவிற்கு பல்வேறு நாடுகள் ஆதரவும் உதவியும் வழங்க முன் வந்துள்ளன. இந்த துயரச் சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆறு தசாப்தங்களில் மொராக்கோ சந்தித்த மிக மோசமான பேரழிவு இதுவாகும்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பழங்கால நகரத்தில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
CNN
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |