ஒரு கிராமமே மொத்தமாக சமாதியான துயரம்: சிதைத்து சென்ற மொராக்கோ நிலநடுக்கம்
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி ஒரு கிராமமே சமாதியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமாக உருக்குலைந்து
மொராக்கோவின் Tafeghaghte கிராமந்தான், நிலநடுக்கத்தை அடுத்து மொத்தமாக உருக்குலைந்துள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் காயங்களால் மருத்துவமனையில் உள்ளனர் அல்லது மரணமடைந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
@bbc
சுமார் 200 குடும்பங்கள் வசித்து வந்த கிராமத்தில் 90 குடும்பங்கள் மொத்தமாக சமாதியானதாகவும், பல எண்ணிக்கையிலானோர் மாயமாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
பலருக்கும் தப்பிக்க முடியாமல் போனது எனவும், பலரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் பலர் தற்போதும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும், ஆனால் அவர்களை வெளியே தோண்டியெடுக்க முடியுமா என்பது சந்தேகமே என ஒருவர் கண்கலங்கியுள்ளார்.
அந்த கிராமப்பகுதியை பொறுத்தமட்டில் மீட்பு நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே இருப்பதாகவும், சிறப்பு குழுவினர் இன்னும் வந்து சேரவில்லை என்றும் கூறுகின்றனர். கடவுள் இந்த இக்கட்டான சூழலை அளித்துள்ளார், அவர் தங்களுக்கு இதுவரை செய்த செயல்களுக்காக நன்றி தெரிவிக்கிறோம் என்ற ஒருவர்,
ஆற்றுப்படுத்த முடியாத அழுகை
ஆனால் தற்போது அரசாங்கத்தின் உதவியை நாடுகிறோம், இதுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழலில் மொராக்கோ நிர்வாகம் சர்வதேச உதவிகளை ஏற்க வேண்டும் எனவும், ஆனால் சுய கெளரவம் அதைத் தடுக்கலாம் என்ற அச்சம் உள்ளது என மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
@bbc
மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை நிலநடுக்கத்தில் இழந்த ஒருவர், தமது குடியிருப்பு இருந்த பகுதியை காட்டி, வெறும் மண் மேடாக உள்ளது என்றார். தூக்கத்திலேயே பலரது உயிர் பறிபோயுள்ளது என குறிப்பிடும் மக்கள், சடலங்களை மீட்டு அடக்கம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நாட்டின் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஆற்றுப்படுத்த முடியாத அழுகையின் குரல் தான் ஒலிக்கின்றது என கூறும் ஊடகவியலாளர் ஒருவர், ஒவ்வொரு கிராமத்திலும் இதே துயரம்ந்தான் எஞ்சியுள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |