ட்ரம்ப் - புடின் சந்திப்பில் மீண்டும் அதிரடி திருப்பம்... ரஷ்யா அதற்கு மறுப்பு
உக்ரைன் ஜனாதிபதியை தாம் சந்திக்கும் முடிவில் இல்லை என விளாடிமிர் புடின் மீண்டும் அழுத்தமாக பதிலளித்துள்ளார்.
கால அவகாசம் இல்லை
அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராகி வருவதாக தெரிவித்திருக்கும் அதே வேளையில், புடினின் இந்த கருத்து உக்ரைன் போர் தொடர்பில் கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் தமக்கு எதிர்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள புடின், அவரை சந்திப்பது உறுதி என்றும் ஆனால் சில நிபந்தனைகள் முடிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இன்னும் அத்தகைய நிபந்தனைகளை உருவாக்கவில்லை என்றும், அதற்கான கால அவகாசம் இல்லை என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை, கிரெம்ளினில் ட்ரம்பின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்காஃப்பை ஜனாதிபதி புடின் சந்தித்தார். இந்த நிலையில், ட்ரம்பை நேருக்கு நேர் சந்திக்க புடின் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.
புடின் - ட்ரம்ப் சந்திப்பு
ட்ரம்புடனான சந்திப்பை அடுத்து, ஜெலென்ஸ்கியும் இணைந்து மூவரும் உக்ரைன் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவார்கள் என கூறப்பட்டது. மட்டுமின்றி, ஜெலென்ஸ்கியை புடின் சந்திக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே புடின் - ட்ரம்ப் சந்திப்பு நடக்கும் என்ற கருத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதி செய்தனர்.
ஆனால் புடின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஜெலென்ஸ்கி தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கை என்பது ஜனாதிபதி ட்ரம்புடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே உக்ரைன் போருக்கு முடிவைக் கொண்டுவரும் என்பதே.
ஆனால், ட்ரம்புடன் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதில் புடின் பிடிவாதமாக உள்ளார். இதை ஜெலென்ஸ்கி ஏற்க மறுத்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |