புடின் வாழ்த்து கூறாத நிலையில்..டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு குறித்து பேசிய ரஷ்ய அதிகாரிகள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் வெற்றி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்னும் வாழ்த்து கூறவில்லை.
ஆனாலும், கிரெம்ளினில் உள்ள உயர் அதிகாரிகள், ரஷ்ய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பில் அவர்கள் கூறும்போது, "பதவியேற்பு விழா நடக்கும் வரை நாங்கள் உக்ரைனில் முன்னேறுவோம். ஜனவரிக்குள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் நிர்வாக எல்லைகளை அடைவது நல்லது. பின்னர் கெர்சனுடன் என்ன செய்வது என்று முடிவு செய்வோம்.
ரஷ்ய படைகள் உக்ரைனில் தொடர்ந்து முன்னேறினால், புதிய அமெரிக்க நிர்வாகம் சண்டையை நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்மொழிவது தர்க்கரீதியானதாகவும், எளிதாகவும் இருக்கும். கீவ் பேச்சுக்களை நடத்த அதிக தயார்நிலையைக் காண்பிக்கும்" என தெரிவித்தனர்.
மாஸ்கோவிற்கு யாரும் வரவில்லை
மேலும், டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு திரும்புவது ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போர், பலவீனமான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்படும் என நம்புவதாக 7 மூத்த அதிகாரிகள் மற்றும் ரஷ்ய வணிக உயரடுக்கின் 3 உறுப்பினர்கள் Vpostயிடம் தெரிவித்தனர்.
அதேபோல் ரஷ்ய அதிகாரி ஒருவர், "டிரம்ப் பதவியேற்று தனது குழுவை அமைத்தவுடன், நாங்கள் ஆலோசனைகளைத் தொடங்க ஒப்புக் கொள்ளலாம். அவர் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக இருக்கும். இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோவிற்கு யாரும் வரவில்லை" என்றார்.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதில் டிரம்ப் விரக்தியுடன் இருப்பார் என்று ரஷ்ய ராஜதந்திரிகள் கணித்துள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அதிகாரம் இல்லாததால், பெயர் தெரியாத நிலையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |