ஜப்பான் பிரதமருக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
ஜப்பான் பிரதமர் உட்பட ஜப்பானியர்கள் 63 பேருக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பான் பிரதமர் உட்பட 63 ஜப்பானியர்களுக்கு எதிராக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி ஆகியோருடன் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
63 ஜப்பானிய அதிகாரிகள் காலவரையின்றி ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்கியதில் கொழுந்துவிட்டு எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு! வெளியான பரபரப்பு வீடியோக்கள்
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் சொத்துக்கள் மீது மேற்கு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இதனையடுத்து, பல பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்டவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் ஆகியோர் அடங்குவர்.