அடுத்த 48 மணி நேரத்தில்... ரஷ்யா தொடர்பில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் விடுத்த எச்சரிக்கை
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் திரளும் மக்கள் கூட்டம் மீது பயங்கரவாத தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டு பிரித்தானியாவும் அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய விடுமுறை நாட்களில்
அடுத்த இரு தினங்களுக்கு குடிமக்கள் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையானது ரஷ்யாவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான சர்வதேச மகளிர் தினத்துடன் முன்னிட்டு விடுக்கபப்ட்டுள்ளது.
@reuters
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாஸ்கோவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ தாக்குதலுக்கு எந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர் என்பது மர்மமாகவே உள்ளது.
ஆனால் கூட்டத்தைத் தவிர்க்கவும், புதிய அறிவிப்புகளுக்காக உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும், விழிப்புடன் இருக்கவும் தங்கள் குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.
@getty
வியாழக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் தகவல் வெளியிட்டிருந்தது. மேலும், வெளியான தகவலின் அடிப்படையில் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு
அமெரிக்க குடிமக்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு மாஸ்கோவில் பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் பிரித்தானியர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
@getty
ஆனால் ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதாக முதலில் அமெரிக்க தூதரக அதிகாரிகளே எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போதும் ரஷ்யா மற்றும் பல நிபுணர்கள் தரப்பும் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |