ட்விட்டர் பதிவில் கொசுவத்தி சுருள்! என்ன சொல்கிறார் உதயநிதி?
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கொசுவத்தி சுருளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
உதயநிதியின் சனாதனம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார்.

இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன.
டெங்குவால் குழந்தை உயிரிழப்பு
சென்னை மாநகருக்குட்பட்ட மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரக்ஷன் என்ற 4 வயது சிறுவன் மருத்துவம் பயனளிக்காமல் உயிரிழந்தார்.
இதற்கு, கொசுக்களை விரட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உதயநிதியின் ட்விட்டர் பதிவு
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கொசுவத்தி சுருள் எரிவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு சிலர் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஒரு சிலர், கொசு, டெங்கு காய்ச்சலை ஒழிப்பது போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், சென்னையில் டெங்குவால் 4 வயது குழந்தை உயிரிழந்ததை சுட்டிக் காட்டி கொசுவை ஒழிக்க இதை பதிவிட்டுள்ளார் என கூறியுள்ளனர்.
தற்போது, உதயநிதியின் இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
— Udhay (@Udhaystalin) September 11, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |