உலகில் மிக விலையுயர்ந்த நெயில் பாலிஷ்: விலை எவ்வளவு தெரியுமா?
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலையானது ஒரு நிமிடமாவது யோசிக்க வைக்கும் வகையில் இருக்கும். அப்படி என்ன தான் இந்த நெயில் பாலிஷில் இருக்கின்றது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
உலகின் விலை உயர்ந்த நெயில் பாலிஷ்
உலகின் மிக விலையுயர்ந்த நெயில் பாலிஷின் பெயர் அசச்சூர் ஆகும். இது லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகோசியனால் உருவாக்கப்பட்டுள்ளது.
பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷை இதுவரை 25 பேர் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெயில் பாலிஷ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால் நீங்கள் உற்று நோக்கினால் அதன் உள்ளே 267 காரட் கருப்பு வைரம் மறைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.
இதன் விலை ரூ.1,63,66,000 ஆகும். இது 14.7 மில்லிலிட்டர் ரிட்ஸி டிசைனைக் கொண்டுள்ளது, இதன் விலை மட்டும் ரூ.1,59,83,750.
இந்த விலையில் ஒருவர் 3 Mercedes-Benz GLA ஐ வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |