பாம்புக் கடியால் உயிரிழப்பு வீதம் அதிகம் உள்ள நாடு.. உலகிலேயே முதலிடம்
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் தீண்டப்படுகிறார்கள்.
சுமாராக 81,000 முதல் 138,000 வரை மரணிக்கிறார்கள். உலகளவில் பாம்புக்கடி இறப்புகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
'Time to Bite Back: Catalyzing a Global Response to Snakebite Envenoming' என்ற அறிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 58,000 இறப்புகள் பாம்பு கடியால் பதிவாகின்றன என தெரியவந்துள்ளது.
உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம்
இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் ஏழை மற்றும் பழங்குடி சமூகங்களிடையே நடக்கிறது. பாரம்பரிய மருத்துவம் மற்றும் தரமற்ற பராமரிப்பு ஆகிய இரண்டு காரணங்களால் தான் இந்த இறப்புகள் ஏற்படுகின்றன.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மருத்து தரப்பு வெளியிட்ட அறிக்கை
இது குறித்து மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில், "பாம்புக்கடி மரணங்களைத் தடுக்க இந்தியா தவறிவிட்டது. அதன் சுகாதார அமைப்பு எப்போதும் தயாராக இல்லை.
மருத்துவர்களிடம், திறம்பட சிகிச்சையளிப்பதற்கான பயிற்சி, உபகரணங்கள் அல்லது நம்பிக்கை இல்லை..” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த அறிக்கை, பாம்புக்கடி இறப்புகளைக் குறைப்பதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.
இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கான பயனுள்ள வசதிகள் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |