1,200 மடங்கு ஆபத்தான விஷம் கொண்ட உயிரினம் எது தெரியுமா?
சையனைடை விட ஆயிரம் மடங்கு ஆபத்தான விஷத்தன்மை வாய்ந்த உயிரினங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
முள் எலி மீன்
இந்த வகை மீன்கள் சையனைடு என்ற விஷத்துடன் ஒப்பிடும்போது 1,200 மடங்கு விஷத்தன்மையை கொண்டவை ஆகும்.
இவை ஆபத்து என்று வரும்போது உடலை ஊதிப்பெரிதாக்கிக் கொள்வதற்குப் பிரபலமானவை. இவற்றின் உறுப்புகளில் டெட்ரோடோடாக்சின் எனும் கொடிய விஷம் உள்ளது.
எனினும், இந்த மீன்கள் ஜப்பானில் சுவையான உணவாகும். ஆனால், அதனை பாதுகாப்பாக சமைக்க சமையல் கலைஞர்கள் உயர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
கொமோடோ டிராகன்
இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்த இராட்சத பல்லிகள், தங்கள் அளவு மற்றும் பலத்தை நம்பியுள்ளன. ஆனாலும், இவற்றின் கடியில் இரையானது பலவீனமடைந்து சரிந்து விழும்.
அந்த அளவிற்கு கொடிய விஷம் கொண்டவை இவை. இன்லெண்ட் டைபன் இந்த பாம்பு ஒரு முறை கடித்தால் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொல்லும் திறன் கொண்டது.
இதனை மனிதர்கள் அரிதாகவே பார்க்கிறார்கள். ஏனெனில், கூச்ச சுபாவம் கொண்ட இந்த உயிரினம் மனித தொடர்பை தவிர்க்கிறது.
பிரேசிலியன் வாண்டரிங் சிலந்தி
இந்த சிலந்தி தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படுகிறது. இது "வாழைப்பழ சிலந்தி" என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் விஷம் தசைப்பிடிப்பு மற்றும் அரிதான சமயங்களில் மரணம் உட்பட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த விஷயத்தைக் கொண்டுள்ளது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி
தங்க விஷத் தவளை
நம்ப முடியாத அளவிற்கு ஆபத்தான இந்த உயிரினத்தின் மேல் பட்ராக்கோடாக்சின் எனப்படும் நச்சுப்பொருளால் மூடப்பட்டிருக்கும்.
இது மனிதர்களை தாக்கினால், நரம்புகள் செயல்படுவதை நிறுத்தி பக்கவாதம் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.
பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் இந்தத் தவளையின் விஷத்தைப் ஊதுகுழல் அம்புகளில் பயன்படுத்தி பழங்குடி மக்கள் வேட்டையாடினர்.
நீள வளைய ஆக்டோபஸ்
அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில பகுதியில் உள்ள பாறைக் குட்டைகளில் காணப்படும். டெட்ரோடோடாக்சின் என்ற விஷத்தை இது கொண்டுள்ளது.
இந்த விஷம் தசைகளை முடக்கி சுவாசத்தை நிறுத்திவிடும். இதற்கு மருந்து இல்லை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |