தாயுடன் 9 மாத குழந்தையை உயிருடன் மீட்பு., உலகிற்கு நம்பிக்கை அளித்துள்ள 4 உயிர்கள்
வெனிசுலாவில் தாயுடன் 9 மாத குழந்தையை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,150 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பேரழிவிற்கு மத்தியில், ஒரு அதிசயமான மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Fairfax County Urban Search and Rescue குழுவும், பிரான்ஸ் Civil Security குழுவும் இணைந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு தாய் மற்றும் 9 மாத குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கையின் போது, மருத்துவ குழுவினர் உடனடியாக IV திரவங்கள் மற்றும் மருந்துகள் வழங்கி, இடிபாடுகளை மிகுந்த கவனத்துடன் அகற்றினர்.
Footage shows a U.S. team rescuing a mother and her baby from under the rubble in Venezuela. At least 1,430 people were killed and more than 3,200 were injured after a pair of powerful earthquakes struck the country on Wednesday.
— ABC News (@ABC) June 28, 2026
Follow live updates: https://t.co/Mzm6QsaUQe pic.twitter.com/W5EWaDlD0P
மேலும், லா குவாய்ரா மாநிலத்தில் நான்கு நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு தந்தை மற்றும் அவரது மகனும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை சுமார் 12 மணி நேரம் நீடித்தது. மீட்பு குழுவினர் சிறப்பு கேமராக்கள் மற்றும் அதிநவீன கருவிகள் பயன்படுத்தி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மிகவும் கவனமாகவும் பாத்திரமாகவும் வெளியே கொண்டு வந்தனர்.
இந்த அதிசயமான மீட்புகள், இன்னும் பலர் உயிருடன் சிக்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையை மீட்பு குழுவினருக்கும், அன்புக்குரியவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களுக்கும் அளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |