மகனை ஹோட்டல் அறையில் விட்டுச் சென்ற தாய்: தனிமையில் வாடிய சிறுவன் எழுப்பிய கேள்வி
மத்திய சீனாவில் தாய் ஒருவர் தனது மகனை ஹோட்டல் அறையில் நீண்ட நாள் தனியாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனை ஹோட்டல் அறையில் விட்டுச் சென்ற தாய்
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி மாதம் யூ(yue) என்ற 25 வயது பெண் தன்னுடைய மகனுடன் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் மகனுடன் பகல் நேரத்தில் ஹோட்டல் அறையில் இருந்து விட்டு இரவு நேரங்களில் வெளியே சென்று வந்த தாய், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஹோட்டல் அறைக்கு திரும்பவில்லை.
மேலும் மகனுடன் எந்தவொரு தொடர்பும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளார்.

தனிமையில் வாடிய மகன்
தாய் திரும்பி வராததால் 6 வயதான மகன் செங் செங்(chengcheng) ஹோட்டல் அறையின் நான்கு சுவர்களுக்குள் தனிமையில் வாடியுள்ளார்.
ஒரு முறை ஹோட்டல் அறையில் இருந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரிடம், “உனக்கு அப்பா, அம்மா இருக்கிறார்களா?” என்றும் கேட்டுள்ளார்.
சிறுவன் தனியாக விடப்பட்டதை அறிந்த ஹோட்டல் ஊழியர்கள், சிறுவனை அரவணைத்து கொண்டுள்ளனர்.
அத்துடன் காணாமல் போன தாய் குறித்து பொலிஸாரிடமும் புகார் அளித்துள்ளனர்.
திரும்பி வந்த தாய்
நீண்ட தேடலுக்கு பிறகு மார்ச் 24ம் திகதி தாய் யூ மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார்.
தாயை கண்டதும் ஓடிச் சென்று கட்டி அணைத்து கொண்ட சிறுவன் செங் செங்-யிடம் தாய் யூ மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் தனக்கு கடன் சுமைகள் இருப்பதாலும், நோய் தொற்று பயம் காரணமாகவே மகனை விட்டுச் சென்றதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் சிறுவனின் பாதுகாப்பு கருதி, செங் செங் தற்காலிகமாக வளர்ப்பு குடும்பத்திடம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |