துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர்
துபாயில் தாயின் மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரித்து வருவதால், சிகிச்சையை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டு தமிழருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தாய் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு
தமிழகத்தை சேர்ந்த திலக் குமார் மற்றும் அவரது மனைவி ஷாமினி ரமேஷ் கடந்த 8 ஆண்டுகளாக துபாயில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
சமீபத்தில் இருவரையும் சந்திப்பதற்காக திலக் குமாரின் தாய் துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 40 நாட்களாக திலக் குமாரின் தாய் ஐசியு-வில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு நாளை ரூ. 3 லட்சம் கட்டணம் என இதுவரை ரூ.1.25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
திலக் குமாரின் தாய்க்கு இன்னும் இரண்டு மாதங்கள் வென்டிலேஷன் சிகிச்சை தேவைப்படும் என்பதால், செலவை குறைக்க சிகிச்சையை இந்தியாவிற்கு மாற்ற திலக் குமார் மற்றும் அவரது மனைவி திட்டமிட்டுள்ளனர்.
ஏர் ஆம்புலன்ஸுக்கு ரூ.50 லட்சம் கட்டணம்
முதலில் இதற்காக 7 லட்சம் ரூபாய் செலவில் வணிக ரீதியான மருத்துவ விமானத்தில் இதற்கான அனுமதியை பெற்றுள்ளார், ஆனால் போர் பதற்றம் காரணமாக விமானம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது தனியார் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மட்டுமே ஒரே வழி என இருந்த நிலையில், போர் பதற்றத்தால் இந்த விமானத்தின் கட்டணம் ரூ. 50 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆனால் திலக் குமாரால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியவில்லை.
இந்நிலையில் நேரம் கடந்து கொண்டு செல்கிறது என்னுடைய தாயை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று NDTV செய்தி வாயிலாக திலக் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |