கழிவறையில் பிறந்த சிசு; குழந்தையை தூக்கி வீசிய தாய்
இந்தியாவின் கொல்கத்தாவில் கழிவறையில் தனது குழந்தையை பிரசவித்து குழந்தையின் அழுகையால் கோபம் அடைந்து, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
கொல்கத்தாவின் கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 22ஆம் திகதி தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.
அது தனது வீட்டின் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் நடந்துள்ளது.
பிறந்த தனது குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு பதறி வந்து பார்த்த நிலையில் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில் வெளிவந்த தகவல்
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.