குழந்தைகள் உடல்களில் தொடர்பு எண்களை எழுதும் உக்ரேனிய தாய்மார்கள்! நெஞ்சை உருக்கும் காரணம்
உக்ரேனிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு எண்களை எழுதியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது 41வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் புச்சா நகரில் பொதுமக்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயாராகி உள்ளன.
இந்நிலையில், உக்ரேனிய தாய் ஒருவர், தனது குழந்தையின் உடலின் பின்புறத்தில், குழந்தையின் பெயர், பிறந்த திகதியுடன் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு எண்களை எழுதியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு கப்பலை தாக்கி கடலில் மூழ்கடித்த ரஷ்ய துருப்பு்கள்!
ரஷ்ய தாக்குதலில் ஒருவேளை குழந்தை இறந்தாலோ அல்லது உயிர் பிழைத்தாலோ, குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள உதவும் வகையில் தாய்மார்கள் இவ்வாறு எழுதியுள்ளார்களாம்.
ஏப்ரல் 3ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் 158 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 250-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குழந்தைகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.