தித்திக்கும் சுவையில் மோத்திசூர் லட்டு: இலகுவாக எப்படி செய்வது?
வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.
லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் மோத்திசூர் லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மா- 1 கப்
- கேசரி பவுடர்- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- சர்க்கரை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- முந்திரி- 10
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மா சேர்த்து அதில் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து தண்ணீராக கரைத்து எதுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து கரைத்த மாவை பூந்தி கரண்டியில் ஊற்றி பூந்தியாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சர்க்கரையை கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரை கரைந்ததும் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அதில் பொரித்த பூந்தி சேர்க்கவும்.
பின்னர் மிதமான தீயில் வைத்து கிளறி பூந்தி கெட்டியானதும் அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதில் நறுக்கிய முந்திரி, நெய் சேர்த்து கிளறி ஆறியதும் லட்டு பிடித்து எடுத்தால் சுவையான மோத்திசூர் லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |