ஈரானில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: மலையேறிகள் 10 பேர் உயிரிழப்பு
ஈரானில் மலையேறிகள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து
ஈரானில் மலையேறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் வர்சகன்(Varzaghan) நகருக்கு அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது என மாகாண அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் வஹித் ஷாதினியா தெரிவித்துள்ளார்.
மினி பேருந்து மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா கிராமங்களை நோக்கி சென்ற போது தீர்மானிக்கப்படாத காரணத்தால் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 பேர் பலி, 8 பேர் காயம்
இந்த விபத்தில் மினி பேருந்தின் சாரதி உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என செய்தி தொடர்பாளர் வஹித் ஷாதினியா தெரிவித்துள்ளார்.
மேலும் பயணிகள் சரியாக சீட் பெல்ட் அணிந்து இருந்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் சாலைகள் நல்ல முறையில் இருப்பினும், மோசமான சாரதி திறன் மற்றும் வாகன பராமரிப்பு மீதான சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை ஆகிய காரணங்களால் உலகின் அதிகமான சாலை உயிரிழப்புகளில் ஈரானும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |