எலிக்காய்ச்சலின் பிடியில் சிக்கியுள்ள ரஷ்ய ராணுவம்., தலைவலி, வாந்தியால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள்
ரஷ்ய படையினர் எலிக்காய்ச்சலின் பிடியில் சிக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கண்களில் இரத்தம் கசியும், கடுமையான தலைவலி மற்றும் ஒரு நாளைக்கு பலமுறை வாந்தியை உண்டாக்கும் இந்த நோய் ரஷ்ய ராணுவத்தினரிடையே பரவி வருவதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைனின் Kupyansk பகுதியில் உள்ள ரஷ்ய பிரிவுகளில் இந்த நோய் வெடித்ததாக உக்ரைனின் முதன்மை புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எலிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அவற்றின் மலத்தை சுவாசிப்பதன் மூலமோ இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.
இதன், அறிகுறிகள் கடுமையான தலைவலி, உடல் வெப்பநிலை 40 டிகிரிக்கு உயரும், சொறி, சிவத்தல், குறைந்த இரத்த அழுத்தம், கண்களில் இருந்து இரத்தக்கசிவு, குமட்டல் மற்றும் ஒரு நாளைக்கு பல முறை வாந்தி ஆகியவை அடங்கும் என உக்ரைன் தெரிவித்துக்களது.
ஆனால் இந்த தொற்றுநோய் பரவுவது பற்றிய அறிக்கைகள் வெளிவராமல் ரஷ்யா தடுத்து வருவதாக உக்ரைன் கூறுகிறது.
மேலும் ரஷ்யா அதன் துருப்புக்கள் சண்டையிடுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக இதை பயன்படுத்திக்கொள்வதாக உக்ரைன் கூறுகிறது.
இதனிடையே, உக்ரைனில் 22 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தற்போது எந்த காரணமும் இல்லை என்று ரஷ்யா கூறுகிறது.
"எங்களைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை யோசனை பொருத்தமானது அல்ல" என்றும் 'எங்கள் இலக்குகளை அடையும்போது அமைதி நிலவும்' என்று ரஷ்ய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |