அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் தோனி., குணமடைய 6 மாதங்கள் ஆகலாம்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (MS Dhoni) விரைவில் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings ) பிளேஆஃப் சுற்றுக்கு வராததை அடுத்து ராஞ்சி சென்ற தோனி, அங்கு தனது Yamaha RD 350 பைக்கில் ரைடு சென்ற காணொளி இணையத்தில் வெளியானது.
இதனிடையே, தோனி பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் ஊடகங்களில் வலம் வருகிறது.
தசைப்பிடிப்பு காரணமாக தோனி விரைவில் லண்டன் சென்று அங்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஐபிஎல் போட்டியின் போது தோனிக்கு தசை முறிவு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு, அவர் காலில் ஐஸ் கட்டியுடன் காணப்பட்டார். எனினும் காயத்தை பொருட்படுத்தாமல் அணிக்காக களம் இறங்கினார்.
சிஎஸ்கே பிளே ஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியதால், சிகிச்சைக்காக விரைவில் லண்டன் செல்ல தோனி தயாராகி வருகிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி தனது எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து தோனி குணமடைய குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் ஆகும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
Thala Dhoni back to his routine life! 🥰❤️@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/Yow2so0RXe
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) May 20, 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்ற தோனி, பதினேழாவது சீசனில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவரை அடுத்து, ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
41 வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவரது கடைசி ஐபிஎல் போட்டி என்பதால், தோனியை காண ரசிகர்கள் எப்போதும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
தோனி ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய வரும்போதும் மைதானங்கள் தோனி.. தோனி.. என்ற கோஷங்களால் அதிர்ந்தன. ரசிகர்களின் ஆதரவால் உற்சாகமடைந்த தோனி கடைசி ஓவர்களில் சிக்ஸர் அடித்தார்.
இருப்பினும்., மே 19 அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB-க்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாடி சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில், பெங்களூரு அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |