போதைக்காக 3 வயது மகளை விற்ற கொடூர தாய்: அந்த சிறுமிக்கு நேர்ந்த நடுங்க வைக்கும் துயரம்
பராகுவே நாட்டில் 10 பவுண்டுகள் பெறுமதியான போதை மருந்துக்காக தாயார் ஒருவர் தமது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில், அந்த சிறுமிக்கு நேர்ந்த நடுங்க வைக்கும் துயரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொடூரமாக சீரழிக்கப்பட்டு
மூன்று வயதேயான சிறுமி லஸ் மைதா தமது தாயாரின் காதலனும் போதை மருந்து விற்பனையாளருமான இளைஞரால் அந்த நள்ளிரவில் கொடூரமாக சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
Credit: Newsflash
42 வயதான ஆரேலியா சலினாஸ் வெறும் 10 பவுண்டுகள் பெறுமதியான போதை மருந்துக்காக தமது பிஞ்சு மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு விற்றுள்ளார். இந்த நிலையில், சிறுமியை தோளில் சுமந்தபடி அந்த இளைஞர் வெளியேறுவது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.
சிறுமி லஸ் பொதுவாக நீல நிற ஆடையையே அணிந்து காணப்படுவாராம். ஆனால் சம்பவத்தன்று வெறும் 30 பொட்டலம் போதை மருந்துக்காக ஆரேலியா சலினாஸ் தமது மகளுக்கு துரோகமிழைத்துள்ளார்.
Credit: Newsflash
மட்டுமின்றி, வீட்டில் இருந்து அந்த இளைஞரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்படும் போது, அந்த சிறுமி போராடுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது. அத்துடன், பொறுமை இழந்த அந்த இளைஞர் சிறுமியின் முகத்தில் தாக்குவதும், பின்னர் தோளில் போட்டுக்கொண்டு காட்டுப்பாதையில் மறைந்துள்ளார்.
அடித்தே கொல்ல திட்டமிட்ட மக்கள்
இந்த நிலையில், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்கு பின்னர் சிறுமியின் சடலம் கைவிடப்பட்ட குடியிருப்பு ஒன்றில் இருந்து அக்கம்பக்கத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளதும், அதன் பின்னர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதனிடையே, ஆத்திரமடைந்த கிராம மக்கள், சிறுமியின் தாயார் ஆரேலியா சலினாஸ் என்பவரை அடித்தே கொல்ல திட்டமிட்டு அவர் வீட்டுக்கு விரைந்துள்ளனர். ஆனால் அதன் முன்னர் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Credit: Newsflash
மேலும், அவரது காதலனும் அதன் பின்னர் பொலிசாரிடம் சிக்கிய நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். இந்த வழக்கில் தொடர்புடயதாக நம்பப்படும் 17 வயது சிறுவன் ஒருவனும் கைதாகியுள்ளான்.
சிறுமியின் இறுதிச்சடங்குகளுக்கு உள்ளூர் மக்கள் சுமார் 300 பேர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனிடையே, சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பாழடைந்த வீட்டை அப்பகுதி மக்கள் கோபத்தில் தீக்கிரையாக்கியுள்ளனர்.
Credit: Newsflash